ஏலியன் ரகசியங்கள் வெளியிடுங்க... டிரம்ப் அதிரடி உத்தரவு!
வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசின் ரகசிய கோப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் Donald Trump உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஏலியன்கள் உள்ளனரா என்ற கேள்வி விவாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் Area 51 பகுதியில் ரகசிய ஆய்வுகள் நடக்கின்றன என்ற வதந்திகளும் பரவலாக பேசப்பட்டுள்ளன.
சமீபத்தில் முன்னாள் அதிபர் Barack Obama, ஒரு யூடியூப் பேட்டியில் வேற்றுகிரகவாசிகள் குறித்து கருத்து தெரிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் நேரில் பார்த்ததில்லை என்றாலும், அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் குறித்து தகவல்கள் உள்ளன என்று கூறியிருந்தார். இதனால் உலகம் முழுவதும் மீண்டும் ஏலியன் விவாதம் சூடுபிடித்தது.
இந்த சூழலில், வேற்றுகிரகவாசிகள், அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ரகசிய பட்டியலில் இருந்து நீக்கி வெளியிட உத்தரவிட்டதாக டிரம்ப் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடையே அதிகரித்துள்ள ஆர்வத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் உண்மைகள் வெளிவரவா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
