இறுதி போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?! இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதல்!!

 
இந்தியா ஆஸ்திரேலியா மகளிர்

தென் ஆப்பிரிக்காவில் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடமும், தென்ஆப்பிரிக்கா 2வது இடத்தையும் பிடித்துள்ளது. அதே போல் 'பி' பிரிவில் இங்கிலாந்து  முதலிடமும், இந்தியா  2வது இடத்தையும் பிடித்தன.  இந்நிலையில் இன்று கேப்டவுனில்  இந்தியா  நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா மகளிர்

அதன்படி   இந்த போட்டியை இந்திய அணி  ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு விளையாட உள்ளது. இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிய இந்த இரு அணிகளில் ஆஸ்திரேலியாவே 18 முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தியது. டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அதிகபட்ச ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல்  டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி  அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா மகளிர்

இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளராக  ஜுவான் கோஸ்வாமி உள்ளார்.  அதே போல்  டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை  வீழ்த்திய ராஜேஸ்வரி கயக்வாட் முன்னிலை வகிக்கிறார். கடந்த முறை ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இம்முறை வெற்றி கொள்ள இந்திய அணி அதன் முழு பலத்தை பிரயோகிக்கும். இதில் வெற்றி பெற்றால் இறுதிச் சுற்றுக்கு செல்லலாம் என்ற வேகத்தில் ஆஸ்திரேலிய அணியும் முழு பலத்துடன் விளையாடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web