ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா? இன்று கடைசி லீக் சுற்றில் நியூசிலாந்துடன் மோதல்!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனையடுத்து இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.இன்று நடைபெறும் 12வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து (ஏ பிரிவு) அணியை சந்திக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தது.
இதே போல் மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் ஆட்டங்களில் 60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது. அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட இவ்விரு அணிகளும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!