3வது முறை வெல்லுமா இந்தியா? இன்று முதல் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் துவக்கம்!
சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் இன்று நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளன. இருமுறை சாம்பியனான இந்திய அணி, தனது மூன்றாவது உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுத் தயாராகி உள்ளது.
போட்டி விவரம் மற்றும் இந்திய அணியின் நிலை:
தேதி: நவம்பர் 28, 2025 முதல் டிசம்பர் 10, 2025 வரை.
இடங்கள்: சென்னை மற்றும் மதுரை.
பிரிவு: இந்திய அணி குரூப் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
எதிரணிகள்: சிலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இந்திய அணி மோதுகிறது.
ஏற்கனவே இருமுறை ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, சொந்த மண்ணில் நடக்கும் இந்தப் போட்டியில் நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் உள்ளது.

இந்தியாவுக்கு மேலும் கூடுதல் பலம் சேர்ப்பது, அணியின் முன்னாள் ஜாம்பவான் கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் பயிற்சியாளராகச் செயல்படுவதுதான். உலக ஹாக்கியின் மிகச் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவரான ஸ்ரீஜேஷ்ஜின் வழிகாட்டுதல், இளம் இந்திய வீரர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது உலகக் கோப்பைக்குத் தயாராகும் முன்னதாக இந்திய அணி, பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வலுவான அனுபவத்தைப் பெற்றுள்ளது:
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் சுல்தான் ஆஃப் ஜோஹோர் கோப்பைப் போட்டியில், இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னர் பெர்லினில் நடந்த 4 நாடுகள் போட்டி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடந்த சுற்றுப் பயணங்கள் மூலம் உலகத் தரத்திலான ஆட்ட அனுபவத்தைப் பெற்றிருந்தது.
இந்த அனுபவங்களையெல்லாம் மூலதனமாகக் கொண்டு, இந்திய அணி பெங்களூருவில் உள்ள சாய் மையத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு உலகக் கோப்பைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
