காவலரை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
டாஸ்மாக்

சென்னை அமைந்தகரை என்.எஸ்.கே நகரில் நேற்று முன்தினம் சாலையோரம் ஒருவர் மதுபோதையில் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடியுள்ளார். இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு அவர் நடந்துகொண்டார். அதோடு மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் அந்த நபர் தகராறு செய்துள்ளார்.

இதனிடையே, அந்த சாலையில் பைக்கில் சென்ற போக்குவரத்து காவலர் முத்துச்செல்வன், அரைகுறை ஆடையுடன் போதையில் தகராறு செய்தவரிடம் சென்று பேசியுள்ளார். அப்போது அந்த நபர், போக்குவரத்து காவலரையும் ஆபாசமாக பேசியதுடன் தாக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, போக்குவரத்து காவலர் உடனடியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அப்போது அருகில் காரில் மது அருந்தி கொண்டிருந்தவர்  காவலர் முத்துச்செல்வனிடம், நீ யார்? என எகிறி அடித்துள்ளார். அத்துடன் நில்லாமல் அவரை  தகாத வார்த்தைகளால் சராமாரியாக திட்டி தீர்த்துள்ளார். மேலும்  அவரை கன்னத்தில் அறைந்ததுடன் அவரது மொபைலையும் பறித்துக் கொண்டார். காவலர் முத்துச்செல்வன் இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காவலரை தாக்கியவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அமைந்தகரை பகுதியில் வசித்து வருபவர் எனவும் அவரது பெயர்  கண்ணன் என்பதும் உறுதி செய்யப்பட்டது.  இவர் திமுகவில் மேற்கு மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை தலைவராக இருந்து வருவதாக கூறினார். 
 

டாஸ்மாக்

அப்போது அங்கிருந்து ஒருவர் ஓடிவந்து திடீரென போக்குவரத்து காவலரின் கன்னத்தில் சரமாரியாக அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர், நான் போலீஸ்காரர், பணியை முடித்துவிட்டு செல்கிறேன். குடிபோதையில் தகராறு செய்ததால் அந்த நபரை பற்றி விசாரித்தேன், என்று தெரிவித்துள்ளார். 

எனினும் அந்நபர் தகராறு செய்துள்ளார். இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீசார், காவலரை தாக்கிய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கண்ணன் (49) என்பதும், அவர் டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

டாஸ்மாக்

மேலும், குடிபோதையில் காவலரை தாக்கினார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web