மறுபடியும் லாக்-டவுன் வந்துடுமோ?! உலகம் முழுவதும் ஒரே நாளில் 72 ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா தொற்று!

 
கொரோனா

புலி வருது புலி வருதுன்னு சொல்லி, கடைசியில மறுபடியும் இன்னொரு லாக்-டவுன் வந்துடுமோ என்கிற ரீதியில் தினந்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது புள்ளி விவரங்கள். உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம். இதன் மூலமாக உலகில் சுமார் 68.63 கோடி பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சைனாக்காரன் புண்ணியத்தில் ஏறக்குறைய மனுஷன் நிம்மதியா மூச்சு விட்டே முழுசா மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு. ஆனாலும் இன்னும் கொரோனா வைரஸ் முழுசா கட்டுக்குள் வரலை. பெருமை பேசும் அமெரிக்கா தொடங்கி, ஆளாளுக்கு மருந்து கண்டுப்பிடிக்கிறேன் பேர்வழி என மூளையைக் கசக்கினாலும், தொடர்ந்து உருமாறிக் கொண்டே விஞ்ஞானிகளை திணறடித்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்.  வளர்ந்த நாடு, வளரும் நாடு, ஏழை, பணக்காரன், ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மாமியார், மருமகள் என எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. ஏசி ரூமுக்குள்ளேயே கதவைப் பூட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பவனும் கொரோனாவுல போறான். ரோட்டுல தில்லா தினசரி வேலைப் பார்க்கிறவனும் கொரோனாவுல பாதிக்கப்படுறான். 

இந்நிலையில், ஓமிக்ரான் கொரோனா உருமாறிபிஏ4 மற்றும் பிஏ வகை கொரோனாவாக உலகெங்கும் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.

கொரோனா

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 68 கோடியே 63 லட்சத்து 45 ஆயிரத்து 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 1 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 39 ஆயிரத்து 480 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

புதிய கொரோனா

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65 கோடியே 88 லட்சத்து 84 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 68 லட்சத்து 59 ஆயிரத்து 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web