கூட்டணி பேச்சுவார்தை? ... எடப்பாடி திடீர் டெல்லி பயணம்!
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் கூட்டணி தொடர்பானதாக இருக்கலாம் என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படலாம் என்ற பேச்சு சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
