விஜய் வியூகம் கை கொடுக்குமா? இன்று முதல் களமிறங்கும் தவெக நிர்வாகிகள்.. விஜய்யின் முக்கிய கட்டளைகள்!
2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும் விஜய், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார். மாமல்லபுரத்தில் சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து, விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு , கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 'விசில்' சின்னத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 25 பேர் கொண்ட வலுவான குழுவை உடனடியாக அமைத்து முடிக்க வேண்டும். இதில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் 50% முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வெறும் அரசியல் பேசாமல், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதனை ஆவணப்படுத்த வேண்டும்.

வரும் பிப்ரவரி 13ம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில் விஜய் தனது வாகனத்தில் இருந்தபடியே மக்களிடையே உரையாற்ற உள்ளார். கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நிர்வாகிகள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளார்.
விஜய் தனது நிர்வாகிகளுக்கு வழங்கிய மற்றொரு முக்கிய அறிவுரை, "நாம் பிற கட்சிகளை விமர்சிப்பதை விட, நாம் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை மட்டும் முன்னிலைப்படுத்துங்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்" என்பதாகும். இது தவெக-வின் தனித்துவமான அரசியல் அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது.

கட்சி தொடர்பான தகவல்களைப் பகிரும்போது தேவையற்ற வதந்திகளையோ, ஆபாசமான கருத்துகளையோ பகிரக் கூடாது என்றும், நாகரிகமான முறையில் அரசியல் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றும் ஐடி விங் பிரிவினருக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.
விஜய்யின் இந்த அறிவுரைகள் தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 'விசில்' சின்னத்தை பிரபலப்படுத்தும் பணிகள் இன்று
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடங்கப்பட உள்ளன.
