வரி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஆதாயமடையக் கூடிய பங்குகள் சிலவற்றை காண்போமா?!

 
இந்துஸ்தான் லீவர் ஷேர்

2023-2024க்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1, 2023 நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரி விதிப்பு முறைக்கான வரி அடுக்குகளில் மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.ரூபாய் 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு பூஜ்யம் சதவிகிதமும், ரூபாய் 3 முதல் ரூபாய் 6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவிகிதமும், ரூபாய் 6 லட்சத்திற்க்குள் வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் மகேந்திரா

மற்றும் ரூபாய் 9 லட்சம், வரி விகிதம் 10 சதவிகிதமும், ரூபாய் 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விகிதம் 15 சதவிகிதமாகவும், ரூபாய் 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விகிதம் 20 சதவிகிதமும், ரூபாய் 15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவிகிதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய வரி முறை இயல்பாகவே அமலுக்கு வரும். மேலும், புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி தள்ளுபடி வரம்பு ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய் 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சரி இதனால் வரும் காலங்களில் எந்தத்துறை பங்குகள் ஏற்றம் பெறும் என பொருளாதார வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்.

டாடா மோட்டார்ஸ்

பொருளாதாரத்தில் நுகர்வை மேலும் ஊக்குவிக்கும் புதிய வரி முறை மற்றும் வரி அடுக்குகளில் மாற்றங்கள் காரணமாக நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் துணை பொருட்கள், FMCG மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை வரும் ஆண்டில் கவனத்தை ஈர்க்கும். டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிவிஆர், கிர்லோஸ்கர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வோல்டாஸ் லிமிடெட் ஆகியவை வரும் ஆண்டில் கவனம் செலுத்தக் கூடிய நிறுவனங்களாக இருக்கும் ஆகவே முதலீட்டாளர் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து இந்தத்துறை பங்குகளில் கவனம் செலுத்தலாம் என்கிறார்கள்.

மேற் கூறிய பங்குகள் சற்று விலை அதிகமாக இருந்தாலும் சிறிது சிறிதாக முதலீட்டை மேற்கொண்டால் பெரும் லாபத்தை அடையலாம் என்கிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web