ஆட்டோ, கார், லாரி கண்ணாடிகள் உடைப்பு... வாலிபர் கைது!

தூத்துக்குடியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோ, லாரி, மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 11 வது தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் இசக்கி (26), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செ்யது வருகிறார். நேற்று முன்தினம் இரவு கட்டபொம்மன் நகரில் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அதே இடத்தில் இவரது உறவினரான சரவணகுமார் தனது காரையும், ஜெயராமன் என்பவர் தனது லாரியையும் நிறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் ஒரு வாலிபர் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோ, லாரி மற்றும் கார் ஆகியவற்றின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினாராம். இதில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இசக்கி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பிரையன்ட் நகர் 11வது தெருவை சேர்ந்த முருகேசன் மகன் ஆகாஷ் (23) என்பவரை கைது செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!