மதுபானப் பிரியர்கள் உற்சாகம்... டாஸ்மாக்கில் கோடையை கொண்டாட 4 புதிய வகை பீர் பாட்டில்கள் அறிமுகம்!
தமிழகம் முழுவதும் 4777 டாஸ்மாக் கடைகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் அரசுக்கு பெரும்பாலான வருவாய் இதன் மூலமே கிடைப்பதாக தெரிகிறது. அதன்படி தினமும் 1.60 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்படும் நிலையில் அதில் 85 லட்சம் பீர் பாட்டில்கள். அதிலும் கோடை காலம் வந்துவிட்டாலே பீர் விற்பனை சாதாரணமாகவே அதிகரித்து விடும்.
இதன் காரணமாக குளிர்ச்சியான பீர் பாட்டில்களை இருப்பு வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மது கடைகளில் பீர் பாட்டில்கள் விற்பனை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி புதிதாக 4 வகைபீர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 12 சதவீதம் வரை பீர் பாட்டில்கள் விற்பனை குறைந்துள்ளதால் இந்த புதிய வகை பீர்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி பிளாக்பஸ்டர் என்ற பீர் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது போக பிளாக் போர்டு, உட்பெக்கர் ஆகிய இரண்டு வகை பீர்களை அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். மேலும் இது போக மற்றொரு பீர் பாட்டிலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
