ஐ.பி.எல். கோப்பையை விட டெஸ்ட் தொடரை வெல்வது தான் பெரியது ... சுப்மன் கில் !

இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில் லீட்ஸ், சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களம் இறங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி முந்தைய போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடர் குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் ஒரு கேப்டனாக ஐ.பி.எல். கோப்பையை வெல்வது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது இவற்றில் டெஸ்ட் தொடர் தான் பெரியது. ஏனெனில் ஒரு கேப்டனாக அடிக்கடி இங்கிலாந்துக்கு சென்று விளையாட வாய்ப்பு கிடைக்காது.
அத்துடன் உங்களது தலைமுறை சிறந்த வீரர்கள் 2-3 சுற்றுப்பயணத்தில் மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால், ஐ.பி.எல். கிரிக்கெட் அப்படி இல்லை. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வசப்படுத்துவது, ஐ.பி.எல். கோப்பையை வெல்வதை விட பெரியது, கவுரவமிக்கது. தற்போதைய இந்திய அணி போதிய அனுபவம் இல்லை என்கின்றனர். அதனால் எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லை. அதுவே எங்களுக்கு சாதகமான ஒரு அம்சம் தான். எங்களது மூத்த வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் எங்கு சென்று விளையாடினாலும் வெற்றி பெற முடியும் என்பதை பதிவு செய்துள்ளனர். அதையே நாங்களும் பின்பற்றுவோம். எனது கேப்டன்ஷிப் ஸ்டைல் அணுகுமுறையை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்த ஆண்டு ஆகஸ்டு அதாவது கடைசி டெஸ்ட் நடக்கும் வரை காத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!