நெகிழ்ச்சி... கேப்டன் உடலை 3 முறை வலம் வந்த கருடன்.. .மெய்சிலிர்த்த மக்கள் வெள்ளம்...!

 
கேப்டன்

 மார்கழி மாதம் முழுவதுமே  சொர்க்கவாசல்  திறந்திருக்கும். இந்த மாதத்தில் உயிரிழப்பவர்கள் நேரமாக வைகுண்டம் செல்வர் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அந்த வகையில் கேப்டன் நிமோனியாவால்  பாதிக்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் டிசம்பர்  28ம் தேதி காலமானார்.  அவர் உயிரிழந்த செய்தியை கேட்டதுமே தொண்டர்கள்,ரசிகர்கள் , திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உட்பட 15லட்சத்துக்கும் அதிகமானோர் இறுதி அஞ்சலி செலுத்த கூடினர்.   சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீடு, கட்சி அலுவலகம், தீவுத்திடலில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.    தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலிருந்து எல்லாம்   பேருந்துகள், லாரிகள், டெம்போக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.  

கருடன்


 நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்ததால் கோயம்பேடு ஸ்தம்பித்தது.  தமிழக அரசு  விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்தது.  அவருடைய இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டது.
10கிமீ இறுதி ஊர்வலத்தில் பூந்தேரில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு வழிநெடுகிலும் கூட்டம் கூட்டமாக  மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேம்பாலங்கள், உயர்ந்த கட்டடங்கள் வீடுகள், அலுவலகங்களில் இருந்துகொண்டு   பூக்களை தூவி தலைவனுக்கு அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும்  விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள்   கை கூப்பி நன்றி தெரிவித்தனர்.
வயதானவர்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி  விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில்தான் அவருடைய உடல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது  வானில் இரு கருடன்கள் வட்டமிட்டன. அவருடைய உடலை  3 முறை வட்டமிட்ட கருடனை பார்த்து அங்கிருந்தோர் மெய்சிலிர்த்தனர். பிரேமலதா , மகன்கள் உட்பட அனைவரும்  கருடனை கும்பிட்டனர்.

கேப்டன்

கருடன்  கும்பாபிஷேகம் மற்றும் ஆன்மிகவாதிகளின் மரணங்களின் போது வட்டமிடுவது இயற்கையான நிகழ்வாக கருதப்படுகிறது.  அந்தமாதிரியான  ஒரு நிகழ்வு விஜயகாந்துக்கு நடந்ததை பார்த்த போது அவருடைய புண்ணியம் புலப்படும் என்கின்றனர் தொண்டர்கள்.  
 கேப்டன் ஆண்டாள் பக்தர். அதனால் தான் தன்னுடைய இல்லம், கட்சி அலுவலகம், திருமண மண்டபத்துக்கும் ஆண்டாள் அழகர் என பெயரிட்டார்.   மதுரைக்கு சென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்காமல்  இருக்க மாட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் தங்க முலாம் பூச தங்கத்தை அன்பளிப்பாக கொடுத்தவர்.  அவருடைய கல்லூரிக்கு ஆண்டாள் அழகர் என்றுதான் பெயர்.  விஜயகாந்தை கருடன் வட்டமிட்டதால் பெருமாளே நேரில் வந்து விஜயகாந்தை சொர்க்கத்திற்கு அழைத்து சென்றதாகவே அவரது தொண்டர்களும், ரசிகர்களும்  நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web