கல்யாணமான ஒரே மாதத்தில் கொடூரம்... 3 வயது மகளை நரபலி கொடுத்த சித்தி!

 
உபி

திருமணமான ஒரே மாதத்தில், மூத்தாருக்குப் பிறந்த மகளை நரபலி கொடுத்து அதிர வைத்திருக்கிறார் சித்தி. உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது.  குடும்பத்திற்குள் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து பரபரப்பு நிலவுகிறது.

நரபலி

திரிவேணி மௌரியா தனது முதல் மனைவியை இழந்த நிலையில், தன்னுடைய 3 வயது மகளைப் பராமரிக்க கடந்த ஜனவரி 25ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், மெளரியாவின் இரண்டாவது மனைவி, சிறுமிக்கு எண்ணெய் தேய்த்து, உடல்  முழுவதும் குங்குமம் வைத்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, பூஜையறையில் தான் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கோடரியால் தாக்கியதாக  போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

நரபலி

மகளின் அலறல் சத்தம் கேட்டு, பூஜையறைக்கு ஓடிச் சென்றுப் பார்த்த தந்தை, மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துக் கிடந்ததை கண்டு மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண்ணை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது நரபலி நோக்கில் செய்யப்பட்டதா அல்லது மனநலம் பாதிப்பு காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!