தற்கொலைக்கு முயன்ற தவெக பெண் நிர்வாகி மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

 
தவெக அஜிதா

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகியான அஜிதா ஆக்னல், உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை அடுத்து அவசர சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல், தவெக கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வந்தவர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளில் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். தனது ஆதங்கத்தைத் தெரிவிக்கச் சென்னை சென்ற அவர், பனையூரில் கட்சித் தலைவர் நடிகர் விஜய்யின் காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜிதா

இச்சம்பவத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் அவரைப் பற்றித் தவறான மற்றும் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். மனமுடைந்த நிலையில் இருந்த அஜிதா ஆக்னல், கடந்த டிசம்பர் 25-ம் தேதி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட குடும்பத்தினர், தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தவெக அஜிதா

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சாதாரண வார்டுக்கு (General Ward) மாற்றப்பட்டார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், இன்று காலை அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசிப்பதில் சிரமம் அல்லது மாத்திரைகளின் பக்கவிளைவு காரணமாகப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை உடனடியாக மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றித் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!