கள்ளக்குறிச்சியில் மீண்டும் அதிர்ச்சி... கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் கைது!
Apr 15, 2025, 14:40 IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கல்வராயன்மலையில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் சோதனை நடத்தினர். அப்போது பெருமாநத்தம் மலைக் கிராமத்தில் சேகர் என்பவரின் மனைவி சரிதா (33) என்பவர் தனது விவசாய நிலத்தில் கள்ளச்சாராய ஊறல் வைத்திருப்பது தெரிய வந்தது.

அந்த இடத்தில் இருந்து 250 லிட்டர் மற்றும் 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த மது விலக்கு போலீசார், வழக்குப்பதிவு செய்து சரிதாவை கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
