பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவனை தற்காப்புக்காக கொன்ற இளம்பெண் கைது!

 
பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டம், முர்வால் கிராமத்தில் நேற்று பிற்பகல் நடந்த இந்த பயங்கரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முர்வால் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், நேற்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுக்ராஜ் பிரஜாபதி (50) என்ற நபர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட அவர், அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

அந்த நபரின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடிய இளம்பெண், தனது உயிரையும் மானத்தையும் காத்துக்கொள்ள வேறு வழியின்றி, வீட்டில் இருந்த 'பர்சா' (கோடரி போன்ற ஒரு வகை ஆயுதம்) எடுத்து அந்த நபரைத் தாக்கியுள்ளார். இதில் சுக்ராஜ் பிரஜாபதிக்குக் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சுக்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த இளம்பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

காவல்துறை விசாரணையின் போது அந்த இளம்பெண் கூறுகையில், "நான் வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தவறான எண்ணத்துடன் உள்ளே வந்தார். என்னைப் பலவந்தப்படுத்த முயன்றார். அவரிடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளவே நான் அவரைத் தாக்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தற்காப்புக்காகச் செய்யப்பட்ட கொலையாக இருந்தாலும், புகாரின் அடிப்படையில் தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானாரா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை நடத்தவும், தற்காப்புக்கான உரிமை அவருக்கு இருந்ததா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!