குறைதீர்க்கும் கூட்டத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி... பெரும் பரபரப்பு!
நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி, கொரோனா காலத்தில் அண்டை வீட்டைச் சேர்ந்த சந்திரிகாவிடம் 7 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதில் 2 பவுன் மட்டும் திரும்ப கிடைத்த நிலையில், மீதமுள்ள 5 பவுன் நகைகளை வழங்க வேண்டும் என அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என காயத்ரி குற்றம்சாட்டினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த காயத்ரி திடீரென தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் தலையிட்டு அவரை மீட்டனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
