அதிர்ச்சி... 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!

 
விஷம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி தாளமுத்து நகர், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35), எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திர பிரியா (31) என்ற மனைவியும், ஸ்டேபி (10) ஆரோக்கிய பிரின்ஸ் (8) மற்றும் ஜெசிக்கா (10 மாதம்) என 3 குழந்தைகள் உள்ளனர். 

விஷம்

ஜஸ்டின் சீலன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை துன்புறுத்துவாராம். மேலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க மாட்டாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்திர பிரியா தனது 3 குழந்தைகளுக்கும் தலைக்கு தேய்க்கும் சாயத்தை குடிக்கச் செய்துள்ளார். பின்னர் தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 4 பேரும் வீட்டில் மயங்கி கிடந்தனர்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?