தர்கா நோக்கி அம்பு எய்வது போல் சைகை செய்த பெண் மீது வழக்குப்பதிவு - 7 பேர் மீது போலீசார் அதிரடி!

 
அம்பு

மச்சே கிராமத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெலகாவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் இந்து அமைப்பினர் சார்பாக ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு வாகனங்களில் ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலம் அந்தப் பகுதியில் உள்ள 'அன்சரி தர்கா' அருகே வந்தபோது, வாகனத்தில் நின்றிருந்த ஹர்ஷிதா என்ற பெண், தனது கைகளால் தர்காவை நோக்கி அம்பு எய்வது போன்ற சைகையைக் காட்டியுள்ளார். இந்தப் பெண் செய்த சைகை அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது குறிப்பிட்ட சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, அப்துல் காதர் என்பவர் பெலகாவி போலீசில் புகார் அளித்தார். மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும், குறிப்பிட்ட மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் இந்தப் பெண் செயல்பட்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகாரை விசாரித்த போலீசார், சைகை காட்டிய பெண் ஹர்ஷிதா மற்றும் அந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்திய சுப்ரீத், ஸ்ரீகாந்த், பெட்டப்பா, கங்காராம், சிவாஜி, கல்லப்பா ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.விசாரணை: பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!