நிலத்தகராறில் பெண் கட்டையால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த கும்பல்!

 
கிருஷ்ணகிரி
 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (56) கடந்த 25ஆம் தேதி ஊரக வேலைத் திட்டப் பணிக்குச் சென்று திரும்பும் வழியில் மலை அடிவாரத்தில் காதறுக்கப்பட்ட நிலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த பர்கூர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்தனர். காதுகளில் இருந்த கம்மல், கால்களில் இருந்த கொலுசு காணாமல் போனதால், முதலில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆம்புலன்ஸ்

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், கோவிந்தம்மாள் கட்டையால் தாக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டதா உண்மையாகி, கொலைக்குப் பின்னால் ஆழமான தகராறு இருப்பது உறுதியாகியது. இதையடுத்து எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில், டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் மேற்பார்வையில் பர்கூர் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. கோவிந்தம்மாளின் கணவர் முருகன், மரணிக்கும் முன் தனது 57 சென்ட் நிலத்தை சுப்பிரமணிக்கு ஒப்பந்தம் செய்து பணம் பெற்றிருந்தார். பின்னர் அந்த நிலத்தை சுப்பிரமணியிடமிருந்து முருகனின் அண்ணன் பச்சயப்பனின் மகன் சக்திவேல் வாங்கியுள்ளார். இதனால் நிலம் கைமாறியதற்கு மனக்கசப்பு கொண்ட கோவிந்தம்மாள் அடிக்கடி சக்திவேலுடன் தகராறு செய்து வந்திருந்தார்.

போலீஸ்

சமீபத்தில் சக்திவேல் அந்த நிலத்தில் புதிய வீடு கட்டி குடி பெயர்ந்து சென்றபோது கோவிந்தம்மாள் அவரையும், அவருக்கு ஆதரவாக பேசிய உறவினர்களான வெங்கட்ராமன் (65), கோவிந்தராஜ் (64) ஆகியோரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மூவரும் கோவிந்தம்மாளை கொலை செய்ய முடிவு செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஏரி வேலை முடித்து வீடு திரும்பிய நேரத்தில், மூவரும் இணைந்து கட்டையால் அடித்து, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!