பெரும் அதிர்ச்சி.. .4 வயது மகனை கொலை செய்து சூட்கேசில் அடைத்து தப்பிச்சென்ற பெண் சிஇஓ!

 
சுசனா சேத்

 செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தை மையத்தின் இணை இயக்குநர் சுசனா சேத். இவர்  மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ்  தொழில்நுட்ப நிறுவனத்தில் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.  39 வயதாகும்  சுசனா சேத்,   கோவாவில் தனது 4 வயது மகனுடன்   விடுதியில் தங்கி இருந்த நிலையில்  அங்கிருந்து டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

சுசனா சேத்

 அவர் விடுதிக்கு வரும் போது உடன் சுற்றிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு பாலகன் திரும்ப செல்லும் போது காணவில்லை. இதனை விடுதி ஊழியர்கள் சந்தேகித்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  காவல்துறையினர் விரைந்து வந்தனர்.  கோவாவில் இருந்து விமானத்தில் செல்ல ஊழியர்கள் அறிவுறித்தினர் இருந்தபோதும், காரில் செல்லவே சுசனா சேத் விருப்பம் தெரிவித்துள்ளார் .   போலீசார் சுசனா சேத்திடம்  மகன் பற்றி கேட்ட போது  தனது மகன் , நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பதாக கூறிவிட்டார். அந்த முகவரி கேட்ட போது பொய்யான முகவரியை கொடுத்ததில் மாட்டிக் கொண்டார்.   

சூட்கேஸ்
மேலும் , சுசனா சேத் உடமைகளை சோதனையிட்ட போது   சூட்கேசில் அவரது 4 வயது மகனின் சடலம்  கண்டு பிடிக்கப்பட்டது.  கோவா விடுதியில் அவர் தங்கி இருந்த அறையில் ரத்த கறை இருந்ததும்  குறிப்பிடத்தக்கது. எதற்காக, எப்போது  தனது 4 வயது மகனை சுசனா சேத் கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!