சென்னை பெண் மருத்துவர் தற்கொலைச் சம்பவம்... விஞ்ஞானி கணவர் கைது!
அம்பத்தூர் அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஹசாருதீன் (31) என்பவர், சென்னை ஐசிஎம்ஆர் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஹுருல் சமீரா (29), சென்னை அண்ணாநகரில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார். இருவரும் கடந்த ஆண்டில் காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஹுருல் சமீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் சந்தேகத்துடன் புகார் அளித்ததால், அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் பிராங்டி ரூபன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோட்டாட்சியர் சதீஷ்குமார் விசாரணை அறிக்கையின் படி, ஹசாருதீன் மனைவியை குற்றமாக கொடுமைப்படுத்தி வருவதால், ஹுருல் சமீரா தற்கொலை செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர், ஹசாருதீன் போலீசார் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
