மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண் மருத்துவரின் கார் மோதி உயிரிழப்பு!

 
கார் விபத்து விபத்தில்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டம் போயிசர் பகுதியில்  TAPS மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக தனது கணவருடன் வந்த 70 வயது மூதாட்டி சயலதா அரேகர் மருத்துவரின் கார் மோதியதில்  உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவம் நேற்று நிகழ்ந்து.

மருத்துவமனை வளாகத்திற்குள், முக்கிய நுழைவாயிலில் அவர் சாலையை கடக்க முயற்சித்த போது மருத்துவரின்  கார் திடீரென அவர் மீது மோதி   அவரை இழுத்துச் சென்றது. சம்பவத்தின் முழு நிகழ்வும் சிசிடிவி கேமராவில் பதிவாகி சிசிடிவிவீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

சயலதா அரேகர், தனது கணவர் விஷ்வநாத் அரேகருடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். வெளி நுழைவாயிலில் சாலையை கடந்து செல்லும்  நேரத்தில், ஒரு சிவப்பு நிற மாருதி எஸ்டிலோ கார் திரும்பியது. அவர் காரின் அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். அந்தக் காயங்களால் அவர் உடனடியாக உயிரிழந்தார். 

மருத்துவர்

இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிய டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்ற மருத்துவமனை வளாகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?