துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை... கணவன் வெறிச்செயல்!

 
மருமகனை விஷம் வைத்து கொலை செய்த மாமியார்!! பர பர வாக்குமூலம்!!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் குடும்ப தகராறில் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செவல்விளை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (30). இவர்களுக்கு ஸ்ரீ (10), பூரணசெல்வி (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 11-ந்தேதி செல்வி திடீரென்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே செல்வி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே செல்வியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

உடனே கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்வி இறந்தவுடன் முருகன் திடீரென்று மாயமானார். அவர் நேற்று தென்காசி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் குடும்ப தகராறில் மனைவி செல்வியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து முருகனை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பொன்பாண்டி உத்தரவிட்டார். முருகனை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web