20 வயது கள்ளக்காதலனுக்காக கணவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து கொன்ற மனைவி!

 
கள்ளக்காதல்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, 20 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராவைச் சேர்ந்த 45 வயதான நபருக்கும், 38 வயதான அவரது மனைவிக்கும் நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வயது வித்தியாசமில்லாத கள்ளக்காதல் விவகாரம் கணவருக்குத் தெரியவந்தபோது, அவர் மனைவியைக் கண்டித்துள்ளார்.  தனது காதலனுடன் சேர்ந்து வாழத் திட்டமிட்ட அந்தப் பெண், கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

கள்ளக்காதல்

முதலில் கணவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து அவரைச் சுயநினைவற்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது, மதுவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளனர். அவர் உயிருக்குப்போராடிய நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்துக் கொலையை உறுதி செய்துள்ளனர். மறுநாள் காலையில் கணவர் இயற்கையாக இறந்து விட்டதாக அந்தப் பெண் நாடகமாடினார். ஆனால், அந்த நபரின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

உல்லாசம் மனைவி காதலி கள்ளக்காதல் கொலை

உடற்கூறாய்வில் அவர் விஷம் கொடுத்து, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், "தன்னை விட 25 வயது இளையவனான காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால் கணவரைக் கொன்றேன்" என அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அந்தப் பெண் மற்றும் அவரது 20 வயது காதலன் ஆகிய இருவரையும் உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!