கொடூரம்.. .இரவுகளில் ஓயாத அழுகை... வாயில் துணி வைத்து இரட்டை குழந்தைகளை கொலை செய்த தாய்!

 
இரட்டை குழந்தைகளை கொலை செய்த தாய்

உத்திரகான்ட் மாநிலத்தில்   ஹரித்துவார், ஜ்வாலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர்  20 வயது இளம்பெண்.  திருமணம் முடித்து கணவர், 2 குழந்தைகள் இருந்து வருகின்றனர். இரட்டை குழந்தைகளான இருவரும் ஆறு மாத கைக்குழந்தைகள்.  இந்த பெண்மணியின் கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார். திடீரென 2 கைக்குழந்தைகளும்   மர்மமான முறையில் மயங்கி இருந்தன. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இந்த குழந்தைகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். 

குழந்தை வாயில் டேப்
அப்போது, பெண்மணி தான் வெளியே கடைக்கு சென்றதாகவும், பின் மீண்டும் வரும்போது குழந்தைகள் மயங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார். கணவரும் அப்போது வீட்டில் இல்லை என முன்னுக்கு பின் முரணான பதிலளித்துள்ளார். இதனையடுத்து  சந்தேகப்பட்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

குழந்தை
அப்போது, குழந்தைகளின் இளம் தாய் 2 குழந்தைகளையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தினமும் குழந்தைகள் இரவு நேரத்தில் அழுதுகொண்டு இருப்பதை தொடர்கதையாக இருந்துள்ளது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் முடியவில்லை.  இது ஒருகட்டத்தில் குழந்தைகள் மீதான அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.  இதனால் குழந்தை வாயில் துணியை அழுத்தி இருக்கிறார். இதனால் மூச்சுத்திணறிய குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web