பெண் எம்.பி., சாலை விபத்தில் படுகாயம்... கும்பமேளா சென்று திரும்புகையில் சோகம்!

நாடு முழுவதும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள். நேற்று சிவராத்திரி தினத்துடன் மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில், கும்பமேளாவில் கலந்துக் கொண்டு புனித நீராடி, சொந்த மாநிலத்திற்கு திரும்புகையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மாநிலங்களவை எம்.பி. மகுவா மாஜி உள்ளிட்ட 4 பேர் சாலை விபத்தில் படுகாயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜேஎம்எம் எம்.பி. மகுவா மாஜி. இவர் தனது மகன், மருமகளுடன் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளாவில் கலந்துக் கொண்டு புனித நீராட சென்றிருந்தார். திரிவேணி சங்கமத்தில் இவர்கள் புனித நீராடிய பின்னர் தங்களது காரில் ராஞ்சிக்கு புறப்பட்டனர்.
இவர்களின் கார் அதிகாலை 3.45 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லத்தேகார் மாவட்டம் ஹாட்வாக் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் மகுவா மாஜி, அவரது மகன் சோம்விட் மாஜி, மருமகள் கீர்த்தி ஸ்ரீவஸ்தவா, டிரைவர் புபேந்திர பாஸ்கி ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து இவர்கள் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது அபாய கட்டத்தை கடந்துவிட்டதாகவும் இவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். காரை சோம்விட் மாஜி ஓட்டியதாவும், அதிகாலையில் இவர் தூக்க கலக்கத்தில் கண்ணயர்ந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!