வைரல் வீடியோ... "சீட்டு உங்க அப்பாவுடதா?" ரயில் பயணத்தில் பெண் அடாவடித்தனம்!
ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது. முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி, அதனைப் பற்றி கேட்ட ஆண் பயணியை திட்டியதோடு, உயிருக்கு ஆபத்தான மிரட்டலும் விடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வீடியோவில், முன்பதிவு செய்யாத இருக்கையில் அமர்ந்திருந்த பெண், “இது உங்கள் அப்பாவுடைய சீட்டா?” என கடும் சண்டையிட்டது பதிவாகியுள்ளது.
It’s clearly visible in this video that the woman is forcibly sitting on another passenger’s seat, and when asked to move, she starts abusing and even threatens to assault him. The Railways should take strict action, including detaining her and imposing a heavy fine. This video… pic.twitter.com/NltQG0kL8z
— The Nalanda Index (@Nalanda_index) November 27, 2025
பயணி டிக்கெட் காட்டும்படி கேட்டபோதும், “நீங்கள் டிக்கெட் பரிசோதகரா? என்னிடம் டிக்கெட் கேட்க உங்களுக்கு என்ன அதிகாரம்?” என பெண் எதிர்த்து பேசியது காணப்படுகிறது. தொடர்ந்த வாக்குவாதத்தில், “என்னிடம் ஏன் சீட்டு கேட்கிறாய்? பாட்னாவில் உன்னை துண்டு துண்டாக வெட்டுவேன்” என மிரட்டியதைக் கேட்டு, ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோ வெளிவந்தபின் பெண்ணின் நடத்தை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, ரயிலில் முன்பதிவு இருக்கைகள் தொடர்பாக விதிமீறல் செய்வோரை கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வலுப்படுத்தி வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் ரயில் நிர்வாக நடைமுறைகள் குறித்து இந்த வீடியோ புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
