ரோட்டில் நடந்துசென்ற பெண் டாக்டரை துரத்தி வீடியோ எடுத்து பாலியல் தொல்லை... சென்னையில் பரபரப்பு!
சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஓமியோபதி மருத்துவர் ஒருவரை, பின் தொடர்ந்து வந்துத் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்த நபர், உடனடியாகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மருத்துவர் கொடுத்தப் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வசந்தி (30, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஓமியோபதி மருத்துவர், தேனாம்பேட்டையில் சொந்தமாகக் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், தனது கணவரைச் சந்திப்பதற்காக ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வசந்தியைப் பின்தொடர்ந்து வந்த ஒரு நபர், மருத்துவர் வசந்தியைத் தனதுச் செல்போனில் வீடியோ படம் பிடித்துள்ளார். இதை வசந்தி கண்டித்தும் அந்த நபர் தொடர்ந்து அவரைப் படம் எடுத்ததாகத் தெரிகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் வசந்தி, உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில், அங்கிருந்த போலீசார் உடனடியாகச் செயல்பட்டு, வசந்தியை வீடியோ எடுத்த அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் நெற்குன்றத்தைச் சேர்ந்த விஜயகுமார் (47) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்ததுடன், அவர் வீடியோ படம் எடுக்கப் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். பெண்கள் பாதுகாப்பு குறித்த இந்த உடனடி நடவடிக்கை சென்னையில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
