பரபரப்பு வீடியோ... அரசு பேருந்தில் இலவச டிக்கெட் எடுத்த பெண் போலீசில் பொய் புகார்!

 
இலவச டிக்கெட் எடுத்த பெண்

தமிழ்நாட்டை தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லி போக்குவரத்து கழக (DTC) பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண், பெண்களுக்கு வழங்கப்படும் இலவச ‘பிங்க் டிக்கெட்’ கொடுக்கும்படி  கேட்டபோது, நடத்துனர் அதை மறுத்துவிட்டார்.  


இலவச ‘டிக்கெட்டை ஆன்லைனில் வாங்க வேண்டும்’ எனக் கூறி கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.  இதனையடுத்து அந்த பெண்ணுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அபோது நடத்துனர் அந்த பெண்ணை வீடியோ எடுத்துள்ளார்.  ஆத்திரம் அடைந்த பெண் பயணி  தனது தனியுரிமை மீறப்படுவதாகக் கருதிய அந்த பெண், நடத்துனரின் மொபைல் போனைக் கைப்பற்றியுள்ளார். 

இதையடுத்து, நடத்துனர் ‘பணத்தை பறித்துச் சென்றார்’ என பொய்யாக புகார் அளித்துள்ளார்.   இந்த சண்டையையும், உண்மையான நிலமையையும் மற்றொரு பயணி தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அந்த பெண்ணின் செயலுக்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web