கவரிங் நகை மோசடி செய்த பெண் அடித்துக் கொலை... அடகு கடை உரிமையாளர் சரண்...
கோவையில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்பட்ட பெண் ஒருவரை அடித்து கொலை செய்த நகை அடகு கடை உரிமையாளர் போலீசில் சரண் அடைந்துள்ளார். சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை அடகு கடை நடத்தி வரும் ராஜாராமிடம், சுமதி என பெயர் கூறிய பெண், தொடர்ந்து சில நாட்களில் மோதிரம், வளையல் உள்ளிட்ட நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் அந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்ததால் ராஜாராம் அதிர்ச்சியடைந்தார்.

பெண் கொடுத்த முகவரி போலியானது என தெரிந்த நிலையில், ராஜாராம் நண்பர்கள் உதவியுடன் அவரை தேடி வந்தார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மீண்டும் அந்த பெண் அடகு வைக்க வந்தபோது, ராஜாராம் மற்றும் அவரது நண்பர்கள் அவரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அத்திப்பாளையம் ரோடு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பிவிசி பைப் மற்றும் கட்டையால் தாக்கியதில், பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜாராம் போலீசில் சரண் அடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சுதா என்பதும், போலி முகவரியை கூறி கவரிங் நகை மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
