சூப்பர்... பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு... எல் அண்ட் டி நிறுவனம் அதிரடி!

இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ. இந்நிறுவனம் அதன் பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என். சுப்பிரமணியன் வெளியிட்டார்.இதன் மூலம் அதன் தலைமையகத்தில் சுமார் 5,000 பெண்கள் பயனடைவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வின் போது, தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.என். சுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். செய்தி அறிக்கையின்படி, இந்தக் கொள்கையை செயல்படுத்துவது குறித்த விவரங்கள் நிறுவனத்தின் தலைமையால் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விடுப்புக் கொள்கை, தாய் நிறுவனமான L&Tயின் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் நிதி சேவைகள் அல்லது தொழில்நுட்பத் துறைகளில் அதன் துணை நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படாது. L&T-யில் 60,000 பணியாளர்களில் 9% பேர் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நடவடிக்கை, இந்தியாவில் இதே போன்ற கொள்கைகளை செயல்படுத்திய Swiggy மற்றும் Zomato போன்ற நிறுவனங்களுடன் L&T-யும் இணைகிறது.
சுப்பிரமணியன் முன்பு கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2025 தொடக்கத்தில், வாரத்திற்கு 90 மணிநேர வேலை என்ற கொள்கையை கூறினார். அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்களை வேலை செய்யவும் அறிவுறுத்தினார். "உங்கள் மனைவியை முறைத்துப் பார்ப்பது" பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தையும் பகிர்ந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது அறிக்கைகள், வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த பரவலான விமர்சனங்களையும் விவாதங்களையும் தூண்டின.
90 மணி நேர வேலை வார விவாதத்தைத் தவிர, வேலைகளுக்காக இடம்பெயர தொழிலாளர்கள் தயங்குவது வணிகங்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சவால் தான் எனக் கூறியிருந்தார். அரசாங்க நலத்திட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலை செய்ய தயங்குவதற்கு அவர் காரணம் எனக் கூறினார். இந்த அறிக்கை இந்தியாவின் கடின உழைப்பாளி தொழிலாளர் படையை "தவறாக வழிநடத்தும், அவமானப்படுத்தும் மற்றும் மனச்சோர்வடையச் செய்யும்" என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் மாதவிடாய் விடுப்பு கொள்கைகள் பிரபலமடைந்துள்ளன. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு கொள்கையை ஆகஸ்ட் 2024 ல் அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஒடிசா ஆனது. பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வருடத்திற்கு ஆறு நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு மற்றும் இலவச மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளை முன்மொழியும் வரைவு மசோதாவையும் கர்நாடகா பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!