இவங்களுக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை!! முதல்வர் அதிரடி உத்தரவு!!

 
மகளிர் உரிமை தொகை

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக  தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி  செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள்  முதல் இந்த  மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக  சட்டசபேரவையில் அறிவித்தார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் யார் யாருக்கு இத்தொகை வழங்குவது என்பது குறித்தும் விரிவான ஆலோசனை கூட்டம் முதல்வர்  தலைமையி்ல் நடைபெற்றது.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ2000 நிவாரணத் தொகை ?!
 மகளிர் உரிமைத்தொகைக்கான சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்டத்திற்கு ரூ7000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம்  குறித்து   அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் முதல்வர்  ஆலோசனை நடத்தினார். அப்போது, மகளிர் உரிமைத் தொகை குறித்து  ஒவ்வொரு  ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். தகுதியுள்ள ஒரே ஒரு பயனாளி கூட விடுபட்டு  விடாமல் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

குடும்பத்தலைவிகள்1000

இவங்களுக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை 
5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை 
ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை  
சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு  ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.  
பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது. 
எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடையில் தான்  உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்சபட்ச வயது ஏதுமில்லை.
தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web