இனி மகளிர் உரிமைத்தொகை ரூ. 2500.... முதல்வர் அதிரடி அறிவிப்பு...
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தற்போது 1.30 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் குறைவாகவும், குறிப்பிட்ட நில அளவு கொண்ட குடும்பத் தலைவிகளுக்கும் மட்டுமே இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தது கவனம் பெற்றுள்ளது.

இதேபோல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மார்ச் 2025 முதல் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி விரைவில் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகையும் ரூ.500 உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அண்டை மாநிலத்தின் இந்த முடிவுகள் தமிழக மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
