மகளிர் உரிமைத்தொகை 50 % உயர வாய்ப்பு...!
2023 மார்ச் 27-ம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, 2023 செப்டம்பர் 15-ம் தேதி 1 கோடியே 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக மாதந்தோறும் ரூ.1,137 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் சேர்க்கப்படாத பெண்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் இருந்து 16 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கடந்த டிசம்பர் 12-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். அப்போது, உரிமைத்தொகை மேலும் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் நடந்த பொங்கல் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி, பெண்களுக்கு விரைவில் இனிப்பான செய்தி வரும் என்று கூறினார். இதனால், மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படலாம் என்ற பேச்சு திமுக வட்டாரத்தில் பரவியுள்ளது. இந்த அறிவிப்பு கவர்னர் உரையிலா, இடைக்கால பட்ஜெட்டிலா, அல்லது தேர்தல் அறிக்கையிலா வரும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
