பெண்களுக்கு மாதம் ரூ.3000 ... மேற்கு வங்கத்தில் பாஜகவின் 'மெகா' தேர்தல் அறிக்கை!
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக இன்று தனது அதிரடித் தேர்தல் அறிக்கையை (Sankalp Patra) வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை வெளியிட்டார். மம்தா பானர்ஜியின் 'லட்சுமீர் பண்டார்' திட்டத்திற்குப் போட்டியாக, பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதிக்குள் நேரடியாக வங்கித் கணக்கில் செலுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மட்டுமன்றி, வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கும் மாதம் ரூ.3,000 நிதியுதவி மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்ற அதிரடித் திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மம்தாவின் 15 ஆண்டு கால ஆட்சியை 'இருண்ட காலம்' என்று விமர்சித்த அமித் ஷா, பாஜகவின் இந்த அறிக்கை 'சோனார் பங்களா'வை (தங்க வங்காளம்) உருவாக்குவதற்கான ஒரு வரைபடம் என்று முழங்கினார்.

பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியாகவும் பல அதிரடி வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் 'பொது சிவில் சட்டம்' (UCC) அமல்படுத்தப்படும், ஊடுருவல்காரர்களுக்கு எதிராக 'பூஜ்ஜியம் சகிப்புத்தன்மை' கொள்கை கடைப்பிடிக்கப்படும், மற்றும் 45 நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாஜகவின் இந்த 'ரூ.3000' வாக்குறுதி மேற்கு வங்க அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
