மகளிர் உரிமைத்தொகை இன்று முதல் மேலும் 17 லட்சம் பெண்களுக்கு முதல்வர் வழங்குகிறார்!

 
Stalin
 

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. 2021 தேர்தல் வாக்குறுதியைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். முதல் கட்டமாக 1.06 கோடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால், பயனாளிகள் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது.

தற்போது மாநிலம் முழுவதும் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 28 லட்சம் பெண்கள் புதிதாக விண்ணப்பித்தனர். அவற்றில் 17 லட்சம் பெண்கள் தகுதி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் விழாவில் அவர்களுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக உரிமைத்தொகை வழங்குகிறார். இதன் மூலம் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 1.34 கோடியாகிறது. புதிய பயனாளிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் போல 15ஆம் தேதியே ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக இதுவரை மாநில அரசு மொத்தம் ரூ.30,838 கோடி செலவிட்டுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. வருமானம், நில அளவு, மின்சார பயன்பாடு போன்ற தகுதிகள் தொடர்ந்தும் அமலில் உள்ளன. முன்பு கார் இருந்தால் தகுதி இல்லை என்ற நிபந்தனைக்கும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. டாக்சி பயன்பாட்டுக்காக கார் வைத்திருப்பவர்கள் இப்போது உரிமைத்தொகை பெறலாம். நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க ஒருவேளை இன்று புதிய அறிவிப்பு வெளியாகும் என்பதும் தகவல்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!