பகீர்... நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி கொலை செய்த பெண்கள்!
Mar 7, 2026, 18:15 IST
திருச்சி மாவட்டத்தில் நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீனாட்சி மற்றும் புவனேஸ்வரி என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
