எச்சரிக்கையா இருங்க மக்களே!! ஆன்லைன் மோசடியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை !!

 
ரஞ்சினி தேவி

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியை சேர்ந்த சரவணன் (32) என்ற இளைஞர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். சரவணனுக்கு கடந்த மார்ச் 23ஆம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான MEESHO-இல்  இருந்து பேசுவதாக ஒருவர் பேசியுள்ளார்.அப்போது குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் எண் தேர்வாகி உள்ளது. பரிசு பொருளாக மகேந்திரா XUV 700 கார் பரிசாக தருவதாக கூறி உள்ளனர்.

ரஞ்சினி தேவி

இதனை நம்பிய சரவணன் Google Pay மூலம் தவணை முறையில் தினேஷ், பூஜா ராணி, ரஞ்சினி தேவி என்ற பெணர்களுக்கு சுமார் 4,50,000 ரூபாய் வரை பணத்தை அனுப்பி உள்ளார். இதனைத்தொடர்ந்து பணத்தை அனுப்பி ஒரு வாரம் கழித்து,  தன்னை தொடர்புகொண்ட செல்போன் எண்ணுக்கு மீண்டும் அழைத்தபோது அனைத்து எண்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது

பல முறை முயற்சி செய்தும் அவர்களை தொடர்புகொள்ள முடியாததால், பின்னர் தான் திட்டமிட்டு  ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு சரவணன் புகார் அளித்தார்.

ரஞ்சினி தேவி

எனினும் பணம் இழந்த விரக்தியில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web