மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை... ஸ்மிருதி மந்தனா 2வது இடத்துக்கு முன்னேற்றம்!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா 2வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அதே சமயம் பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-10 இடங்களில் எந்த மாற்றமில்லை.
ODI No.1 Batting Ranking spot in reach as a key India batter shines against Sri Lanka and South Africa 🌟
— ICC (@ICC) May 13, 2025
More 👇https://t.co/7YvHskrKLq
நேற்று மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டின் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் இந்திய துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (727 புள்ளி), ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் (738 புள்ளி) உள்ளார். 3வது இடத்தில் இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் (725 புள்ளி), 4வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ் (687 புள்ளி) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் (770 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். 2 மற்றும் 3வது இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (724 புள்ளி), மேஹன் ஸ்கட் (696 புள்ளி) ஆகியோர் உள்ளனர். 4வது இடத்தில் இந்தியாவின் தீப்தி சர்மா (672 புள்ளி) உள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
