மகளிர் பிரீமியர் லீக்.. !! மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!!

ஐபில் போன்று முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்கியுள்ளது. நவிமும்பையில் உள்ள டி.ஓய். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடக்கவிழா நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பெத் மூனி, உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் போட்டிக்கான கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.
தொடக்க விழாவையொட்டி 1 மணி நேரம் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தி நடிகைகள் கியாரா அத்வானி, கீர்த்தி சனோன் ஆகியோர் நடனமாடி அசத்தினர். மேலும் கண்கவர் லேசர் ஒளிவெளிச்சம் நிகழ்ச்சியும் கவனம் பெற்றது.
மும்பையில் நடைபெறும் வரும் 26ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2ஆவது, 3ஆவது இடத்தை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியை எட்டும்.
தொடக்க நாளான நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய முதலாவது லீக் ஆட்டத்தில் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
'டாஸ்' ஜெயித்த குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹேய்லே மேத்யூஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
அதிரடியாக விளையாய நாட்சிவெர் 23 ரன்னிலும் (18 பந்து, 5 பவுண்டரி), ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்னிலும் (31 பந்து, 3 பவுண்டரி 4 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். அரைசதம் விளாசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டி தொடரில் முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற சிறப்பை ஹர்மன்பிரீத் பெற்றார்.
20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி, மும்பை வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவர்களில் 64 ரன்னில் அடங்கியது. இதனால் மும்பை அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹேமலதா ஆட்டம் இழக்காமல் 29 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் பெத் மூனி ரன் எதுவும் எடுக்காத நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
The moment we were all waiting for! 🤩
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
𝗣𝗿𝗲𝘀𝗲𝗻𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 #𝗧𝗔𝗧𝗔𝗪𝗣𝗟 𝗧𝗿𝗼𝗽𝗵𝘆👌👌 pic.twitter.com/sqPBJjWw7A
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க