டிசம்பர் 15 முதல் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!
குடும்பத் தலைவிகளின் வாழ்க்கையை தாங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கிய நாள்முதல் கோடி கணக்கான பெண்களின் கணக்கில் மாதந்தோறும் 1,000 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 1.70 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 கோடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்பு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மற்றும் ஆய்வுகளின் மூலம் தற்போது மாதம் 1.16 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். இதுவரை வழங்கப்பட்ட உரிமைத்தொகை 30,000 கோடி ரூபாயை கடந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் விடுபட்ட பெண்களுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. விதிமுறைகளிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. தற்போது அவை பரிசீலனையில் உள்ளதாகவும், நவம்பர் 30க்குள் புலனாய்வு முடிவடைந்து தகுதியானோர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆவடி தொகுதியின் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக நிகழ்வில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விடுபட்டோர் உட்பட புதிதாக தகுதி பெறும் மகளிருக்கும் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புதிய நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
