செம!! இனி மாதவிலக்கு நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை!!

 
மாதவிலக்கு

இன்று எல்லா துறைகளிலும் நாகரீக வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனாலும் பெண்களுக்கான தேவைகள், அவர்களின் ஆரோக்கியம், அவர்களுக்கான வலிகள் அனைத்தும் எப்போதும் போல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.  முந்தைய காலங்களில் மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனிமைப்படுத்துவர். ஆனால் அந்த நாட்களில் அவர்களுகு முழு ஓய்வு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையுமே நிறுத்த முடியாது. மாதவிலக்கு நாட்களும் வழக்கமான பணிகளை செய்து அதையும் ஒரு நாளாக கடக்க வேண்டும்.

இதற்கு பல நேரங்களில்  பெண்களின் உடல் ஒத்துழைப்பதில்லை. ஆனாலும் தயக்கங்கள், கூச்சங்கள் , அருவறுப்பு காரணத்திற்காக மறைத்து பணிகளை செய்வர். இதனால் பின்னாட்களில் அவர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.   மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வலிகள் குறித்து, தங்கள் குடும்ப ஆண்களிடம் கூட வெளிப்படையாக பேசுவதற்கு அவர்கள் தயக்கம் காட்டினார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீடுகளில் ஆண்கள் அதாவது கணவர்கள், தகப்பன்கள், சகோதரர்கள் பெண்களின் வலியை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அவர்களிடம் பெண்கள் வெளிப்படையாக தங்களது இயலாமையை வெளிப்படுத்தும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது வரவேற்கத்தக்க விஷயம் தான். 

மாதவிலக்கு

இப்படியான நிலையில்தான் கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.இதுதொடா்பான அறிவிப்பை கேரள அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, மாநில உயா்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது என தற்போது கட்டாயமாக்கி அறிவித்துள்ளது.

முன்னதாக, கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்தது. அதாவது, படிப்பின் ஒவ்வொரு பருவத்திலும் கட்டாய 75% வருகைப் பதிவில், மாணவிகளுக்கு கூடுதலாக 2 % தளா்வு அளித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் மூலமாக, மாணவிகள் 73 % வருகைப் பதிவை பெறிருந்தாலே அவர்கள் தோ்வு எழுத முடியும்.

dsf

இந்த நடைமுறையைப் பின்பற்றி, தற்போது அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும் என்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் பிந்து தெரிவித்திருந்தாா். இதுகுறித்து அவர் கூறுகையில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். அன்றைய நாள்களில் அவா்களுக்கு ஓய்வு தேவை என்ற மாணவா் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த சிறந்த முடிவை எடுத்துள்ளது. இது அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்துப்படும், என்று குறிப்பிட்டிருந்தாா்.

அதனைத் தொடா்ந்து, கேரள அரசு கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிகாரில் இதுபோன்ற நடைமுறை கடந்த முப்பது ஆண்டுகளாக மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 1992-ஆம் ஆண்டு ஜனவரியில் பிகாா் அரசு இது தொடா்பான உத்தரவை வெளியிட்டது. அதன்படி மாத விடாய் காரணங்களுக்காக இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். நாற்பத்தைந்து வயது வரையுள்ள பெண்களுக்கு இந்த விடுமுறைச் சலுகை பொருந்தும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web