செம!! கணவன் மனைவி இருவருமே அடுத்தடுத்த மாவட்டங்களில் கலெக்டர்கள்!!

 
ஆஷா

 மருத்துவராக இருப்பவர் மருத்துவரையும், சாப்ட்வேர் துறையில் அதிகாரியாக இருப்பவர்கள் அதே துறையில் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வது நம் நாட்டில் வழக்கமான ஒன்று தான். கணவனின் தொழிலில் மனைவி பங்கெடுப்பது என்பதும் வேலையை பகிர்ந்து செய்வது தான். ஆனால் பொறுப்புக்கள் அதிகரிக்கும் போது அதற்கான சவால்களும் அதிகம் தான். ஒரே துறையில் பணியாற்றும் போது பிரச்சனைகளை கையாளும் விதம் குறித்து கருத்து பரிமாற்றம், ஆலோசனை செய்து கொள்ள முடியும் என சில லாபங்களும் உண்டு தான்.

ஆஷா

அந்த வகையில் தமிழகத்தில் கணவன் மனைவி இருவருமே கலெக்டர்களாக அதுவும் அடுத்தடுத்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாகி வருகிறது. தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் ராமநாதபுரம் கலெக்டராக விஷ்ணுசந்திரனும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் இருவருமே கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.  இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை  ஒன்று உள்ளது.

ஆஷா

இவர்களுக்கு பராமரிக்க சின்னக்குழந்தை இருப்பதால் அருகேகருகே இருக்கும் மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் இவர்களை அரசு நியமித்துள்ளது.  இதற்கு முன்  தேவகோட்டை சப்-கலெக்டராக ஆஷா அஜித்தும், பரமக்குடி சப்-கலெக்டராக விஷ்ணுசந்திரனும் பணிபுரிந்து வந்தனர். நாகர்கோவிலில்  மாநகராட்சி கமிஷனராக ஆஷா அஜித் பணிபுரிந்த  போது விஷ்ணுசந்திரன் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தார்.  இது குறித்து தம்பதிகள் இருவரும் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ நாங்கள் இருவருமே முதல் முறையாக கலெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு எங்கள் பொறுப்பையும் அதிகமாக்கி உள்ளது. எங்களை போன்று பல தம்பதிகள் உயர் அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள். குடும்பம் நடத்துவதை இருவருமே  சிரமமாக கருதுவதில்லை. பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணிபுரிவதால் அவசர தேவைகளுக்கு இருவரும் எளிதாக சந்தித்து கொள்வதில் சவால்கள்  இருந்ததில்லை. அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பணிபுரிவோம் என தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web