செம!! மெட்ரோ ரயிலில் கூடுதல் பெட்டிகள்!! பயணிகள் உற்சாகம்!!

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னை மெட்ரோ பாலிட்டன் சிட்டியை மேலும் மெருகூட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகர் முழுவதையும் மெட்ரோவால் இணைக்கும் முயற்சியில் பல பகுதிகளில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதில் சில வழித்தடங்களில் சோதனை ஓட்டமாக நடத்தப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம் என்பதால் தொடக்கத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்தது. தற்போது பெட்ரோல் விலை உயர்வு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெரும்பாலான மக்கள் தினசரி மெட்ரோவை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களின் தேவைகளின் அடிப்படையில் பல்வேறு புதுப்புது வசதிகளை அப்டேட் செய்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடங்களில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் 2.5 லட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில், அலுவலக நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மெட்ரோவில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-1 மூலம் இயக்கப்படும் ரயில்களின், குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று பொது பெட்டிகளும், ஒரு மகளிர் பெட்டியும் உள்ளன. அதோடு இரண்டு பெட்டிகளை இணைத்து ஆறு பெட்டிகளாக ஒரு ரயிலில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருடத்துக்கு 5 கோடிக்கு மேலாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் பாதையிலும் இதேபோல 6 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க