செம!! இனி தமிழில் எஸ்எஸ்சி தேர்வுகள்!! தேர்வர்கள் உற்சாகம்!!

 
எஸ்எஸ்சி தேர்வு தேதிகள் அறிவிப்பு!!


மத்திய அரசின் பணிகளில் சேருவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன.  இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படவேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில்  எஸ்.எஸ்.சி எம்.டி.எஸ் மற்றும் சி.எச்.எஸ்.எல். ஆகிய தேர்வுகளை தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

இந்த தேர்வுளுக்கான வினாத்தாள் ஆங்கிலம், இந்தி தவிர பிராந்திய மொழிகளான அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி  மொழிகளில் தயாரிக்கப்படும். மத்திய அரசின் பணிகளில் அனைத்து தரப்பினருக்கும், அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு

மொழி தடையால் ஒருவரது உரிமை பறிபோகக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.  ஏற்கனவே மத்திய அரசு பணிகளுக்கான சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் தேர்வுகளை தமிழில் எழுதலாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவு இந்தியா முழுவதும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web