செம!! ”க்யூ ஆர் கோடு ” மூலம் முன் பதிவு இல்லா டிக்கெட்டுகள்!! ரயில்வே அதிரடி!!

 
ரயில்

அனைத்து துறைகளிலும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக காகிதமில்லா நடைமுறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர், வணிக வளாகங்கள் வரை அனைத்திலும் யுபிஐ பணப்பரிமாற்றம் தான். (cashless transaction)  எங்கு சென்றாலும்  கையில் ரொக்கமாக பணம் எடுத்து செல்ல தேவையில்லை.  அதே போல் ரயில் பயணத்திற்கும் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிற்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போதும். பணம் எடுத்து செல்ல தேவையில்லை.

யுபிஐ

அதே போல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை யு.பி.ஐ. மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் 'ஸ்மார்ட் கார்டு' ஐ பயன்படுத்தி  ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வசதிகள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட பல  முக்கிய ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக நெரிசல் அதிகம் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அவசர , அவசிய தேவைகளுக்காக திடீர் பயணம் மேற்கொள்பவர்கள், முன்பதிவு செய்து கொள்ள வசதியில்லாதவர்கள் தான் அவசர கால முன்பதிவில்லா டிக்கெட்டுகளில் பயணம் செய்கின்றனர்.

இதற்கான டிக்கெட்டுகளை பெற நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் பல நேரங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி விடுகின்றனர். அதிலும் , பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் தாமதமாகி விடுகிறது. பயணிகள்  முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதால் அவர்களின் குறைகளை போக்கும் வகையில்  யு.பி.ஐ. செயலி மூலம் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்கும் வசதிகளை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ரயில் முன்பதிவு
 இதன்படி  பயணிகள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போனை பயன்படுத்தி யு.பி.ஐ. செயலி மூலம்  டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.  முதலில் தெற்கு ரயில்வே 6 கோட்டங்களில் 254 தானியங்கி டிக்கெட் எந்திரங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து  ரயில்வே அதிகாரிகள்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அதன்படி தானியங்கி டிக்கெட் வாங்கும் எந்திரத்தில் உள்ள திரையில் பயணி எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என தேர்வு செய்து விட்டு அதற்கான கட்டணத்தை யு.பி.ஐ. செயலி அல்லது கியூ.ஆர்.கோடு மூலம் செலுத்திக் கொள்ளலாம். இந்த  ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி  பயணிகள் தொடர்ந்து  புறநகர் மின்சார ரயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகள்  தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி  மொழிகளில் பிரிண்ட் செய்யப்படும் எனவும் மொத்தம் 96 எந்திரங்களில் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web