செம! ஓலா ஸ்கூட்டருக்கு ரூ.10,000 தள்ளுபடி! இந்த மாத கடைசி வரை சலுகை!

 
ஒரே நாளில் 1,00,000 வாகனங்கள் புக்கிங்! பரபர விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

புவி வெப்பமாதலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாசு அதிகரிப்பதைத் தடுக்கும் விதத்தில் அதன் ஒரு பகுதியாக தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், மானியங்கள் வழங்குவது குறித்தும் இறங்கியுள்ளது. இந்நிலையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் டிசம்பர் மாதத்தில் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

மின்சார வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரித்து வருவதால், நாட்டில் மின்சார வாகன சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் அனைத்து வகையான சலுகைகளும் கிடைக்கிறது. தற்போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவித்து இருந்த ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகையை நீட்டித்து இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் முன்பணமே கொடுக்காமல் ஸ்கூட்டரை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்கூட்டரை வாங்கும் நேரத்தில் வாடிக்கையாளர் பணம் செலுத்த வேண்டியதில்லை.

Ola s1 pro

அந்த வகையில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி இந்த ஆண்டு இறுதிவரை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகை பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்து இருக்கிறது.

இந்த சலுகையின் மூலம் ஒலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ. 10 ஆயிரம் குறைந்த விலை, அதாவது ரூ. 1.30 லட்சத்துக்கு வாங்கிட முடியும். சலுகையின்றி இந்த ஸ்கூட்டர் ரூ. 1.40 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சலுகை ஒலா எஸ்1 ப்ரோ மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி மிக குறைந்த மாத தவணை முறை வசதி, முன்பணம் இன்றி வாங்கும் வசதி, குறைக்கப்பட்ட வட்டி, இதர கட்டணங்கள் முழுமையாக ரத்து, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகலுக்கு கூடுதல் தள்ளுபடி என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.

ola s1 pro

சலுகை தவிர ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் 11 நகரங்களில் புதிதாக 14 எக்ஸ்பீரின்ஸ் சென்டர்களை துவங்கி இருக்கிறது. இவற்றில் மூன்று பெங்களூரு நகரிலும், புனேவில் இரண்டு மற்றும் ஆமதாபாத், போபால், டேராடூன், டெல்லி, ஐதராபாத், கோடா, நாக்பூர், ராஞ்சி மற்றும் வதோதரா போன்ற பகுதிகளில் ஒன்று என்ற வீதத்தில் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web