நடுரோட்டில் காதலன் மடியில் காதலி செய்த வேலை... வைரலாகும் வீடியோ!

 
பைக் காதல் ஜோடி அத்துமீறல்

லஜ்ஜையே இல்லாமல் நடுரோட்டில் பைக்கில் காதலர்கள் செய்த வேலை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம்  விஜயவாடா நகரில் உள்ள நேஷனல் ஹைவே 16-இல், ராமலிங்கேஸ்வர நகர் பைபாஸ் பாலம் பரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கும். இந்த பாலத்தில் இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடி ஒன்று பயணித்தது. இந்த ஜோடி, மதுபோதையில் பொது இடத்தில் ரொமான்ஸ் செய்தது வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைத்தது. சினிமாவை மிஞ்சிய இச்சம்பவம் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

இந்தக் கொடுமையை அவர்களுக்கு  பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு வாகன ஓட்டுனர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில்  வெளியிட்டார். மிகக்குறுகிய நேரத்திலேயே வீடியோ வைரலாக, பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  மக்கள் “பொதுவெளியில் இப்படிப் பழகுவது எவ்வளவு அபாயகரமானது?” என நெட்டிசன்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் “சாலையில் மற்ற பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.  

காதல் ஜோடி

நெட்டிசன்கள் கோரிக்கையின் அடிப்படையில் போலீசார் தற்போது அந்த  காதல் ஜோடியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கும், பொது இடத்தில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்துகொண்டதற்காகவும்  பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும் அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது